Get Adobe Flash player

Lectures

தூய கன்னி மரியாளின் துயரங்கள்
(15.09.2019) ஞாயிறு வாசகங்கள்
Prodigal son

முதல்வாசகம்
ஆண்டவர் மோசேயை நோக்கி, ``இங்கிருந்து இறங்கிப் போ.
விடுதலைப் பயண நூலிலிருந்து வாசகம் 32:7-11,13-14

அந்நாள்களில் ஆண்டவர் மோசேயை நோக்கி, ``இங்கிருந்து இறங்கிப் போ. நீ எகிப்திலிருந்து நடத்தி வந்த உன் மக்கள் தங்களுக்குக் கேடு வருவித்துக் கொண்டனர். நான் கட்டளையிட்ட நெறியிலிருந்து இதற்குள்ளாகவே விலகி அவர்கள் தங்களுக்னெ ஒரு கன்றுக் குட்டியை வார்த்துக் கொண்டார்கள். அதற்கு வழிபாடு செய்து, பலியிட்டு, `இஸ்ரயேலே, எகிப்து நாட்டினின்று உன்னை நடத்தி வந்த தெய்வங்கள் இவையே' என்று கூறிக் கொள்கிறார்கள்'' என்றார்.

Lire la suite : தூய கன்னி மரியாளின் துயரங்கள் (15.09.2019) ஞாயிறு வாசகங்கள் 

08.09.2019 - 23 -ஆம் ஞாயிறு வாசகங்கள்
Jesus 02

முதல் வாசகம்

 ஆண்டவரின் திருவுளத்தைக் கண்டுபிடிப்பவர் யார்?

சாலமோனின் ஞான நூலிலிருந்து வாசகம் 9: 13-18

``கடவுளின் திட்டத்தை அறிபவர் யார்? ஆண்டவரின் திருவுளத்தைக் கண்டுபிடிப்பவர் யார்? நிலையற்ற மனிதரின் எண்ணங்கள் பயனற்றவை, நம்முடைய திட்டங்கள் தவறக் கூடியவை.

Lire la suite : 08.09.2019 - 23 -ஆம் ஞாயிறு வாசகங்கள்

பொதுக்காலம் 22ம் வாரம் (01.0.2019- ஞாயிறு வாசகங்கள்
jesus 01

முதல்வாசகம்
நீ பெரியவனாய் இருக்குமளவுக்குப் பணிந்து நட
சீராக்கின் ஞான நூலிலிருந்து வாசகம் 3:17-18,20,28-29

குழந்தாய், நீ செய்வது அனைத்தையும் பணிவோடு செய்; அவ்வாறாயின், கடவுளுக்கு உகந்தோர் உனக்கு அன்பு காட்டுவர். நீ பெரியவனாய் இருக்குமளவுக்குப் பணிந்து நட. அப்போது ஆண்டவர் முன்னிலையில் உனக்குப் பரிவு கிட்டும். ஆண்டவரின் ஆற்றல் பெரிது; ஆயினும், தாழ்ந்தோரால் அவர் மாட்சி பெறுகின்றார். இறுமாப்புக் கொண்டோரின் நோய்க்கு மருந்து இல்லை; ஏனெனில் தீமை அவர்களுள் வேரூன்றிவிட்டது. நுண்ணறிவாளர் உவமைகளைப் புரிந்து கொள்வர்; ஞானிகள் கேட்டறியும் ஆவல் மிக்கவர்கள்.

Lire la suite : பொதுக்காலம் 22ம் வாரம் (01.0.2019- ஞாயிறு வாசகங்கள்

முதல்வாசகம்
அவர்களிடையே ஓர் அடையாளத்தை நான் ஏற்படுத்துவேன்; அவர்களுள் எஞ்சியிருப்போரை மக்களினத்தாரிடையே அனுப்பி வைப்பேன்
இறைவாக்கினர் எசாயா நூலிலிருந்து வாசகம் 66: 18-21

ஆண்டவர் கூறியது: மானிடர் அனைவரின் செயல்களையும் எண்ணங்களையும் நான் அறிவேன்; பிறஇனத்தார், பிறமொழியினர் அனைவரையும் நான் கூட்டிச் சேர்க்க வருவேன்; அவர்களும் கூடிவந்து என் மாட்சியைக் காண்பார்கள். அவர்களிடையே ஓர் அடையாளத்தை நான் ஏற்படுத்துவேன்; அவர்களுள் எஞ்சியிருப்போரை மக்களினத்தாரிடையே அனுப்பி வைப்பேன்; அவர்கள் தர்சீசு, பூல், வில் வீரர் வாழும் லூது, தூபால், யாவான், தொலையிலுள்ள தீவு நாடுகள் ஆகியவற்றிற்குச் செல்வார்கள்.

Lire la suite : பொதுக்காலம் 21ம் வாரம் (25.08.2019) ஞாயிறு வாசகங்கள்

 

Jesus 02முதல்வாசகம்
நாடெங்கும் வழக்குக் காரணமாய் இருக்கும்படி என்னைப் பெற்றாயே!
இறைவாக்கினர் எரேமியா நூலிலிருந்து வாசகம் 38: 4-6, 8-10

அந்நாள்களில் தலைவர்கள் அரசனைப் பார்த்து, ``இம்மனிதன் கண்டிப்பாய்ச் சாக வேண்டும்; ஏனெனில் இவன் இவ்வாறு பேசி இந்நகரில் எஞ்சியுள்ள போர் வீரர்களையும் மக்கள் அனைவரையும் மனம் தளரச்செய்து வருகிறான். இந்த ஆள் இம்மக்களின் அழிவைத் தேடுகிறானே அன்றி, நலனைத் தேடுவதில்லை'' என்றார்கள்.

Lire la suite : பொதுக்காலம் 20ம் வாரம் (18.08.2019-ஞாயிறு வாசகங்கள்

 

jesus 01முதல்வாசகம்
மூதாதையர்களின் புகழ்ப் பாக்களை அதே வேளையில் பாடிக் கொண்டிருந்தார்கள்.
சாலமோனின் ஞான நூலிலிருந்து வாசகம் 18: 6-9

எகிப்து நாட்டில் தாங்கள் நம்பியிருந்த வாக்குறுதிகளைத் தெளிவாக அறிந்து அவற்றில் மகிழ்ந்திருக்கும்படி அந்த இரவு எங்கள் மூதாதையர்க்கு முன்னறிவிக்கப்பட்டது. நீதிமான்களின் மீட்பையும் அவர்களுடைய பகைவர்களின் அழிவையும் உம் மக்கள் எதிர்பார்த்துக் கொண்டிருந்தார்கள். எங்கள் பகைவர்களை நீர் தண்டித்த அந்த ஒரே செயலால் உம்மிடம் எங்களை அழைத்துப் பெருமைப்படுத்தினீர். நல்லவர்களின் தூய மக்கள் மறைவாகப் பலி செலுத்தினார்கள்; நன்மைகளையும் இடர்களையும் ஒன்று போலப் பகிர்ந்து கொள்வார்கள் என்னும் இறைச் சட்டத்திற்கு அவர்கள் ஒருமித்து உடன்பட்டார்கள்; மூதாதையர்களின் புகழ்ப் பாக்களை அதே வேளையில் பாடிக் கொண்டிருந்தார்கள்.

Lire la suite :  பொதுக்காலம் 19ம் வாரம் (11.08.2019)வாசகங்கள்

பொதுக்காலம் 18ம் வாரம் (04.08.2019) - ஞாயிறு வாசகங்கள்:
jesus 37

முதல்வாசகம்
உழைத்துச் சேர்த்த சொத்தை அதற்காக உழைக்காதவருக்கு விட்டுச் செல்கிறார்
முதல் வாசகம்: சபை உரையாளர் நூலிலிருந்து வாசகம். 1:2, 2:21-23

வீண், முற்றிலும் வீண், என்கிறார் சபையுரையாளர்: வீண், முற்றிலும் வீண், எல்லாமே வீண். ஏனெனில், ஞானத்தோடும் அறிவாற்றலோடும் திறமையோடும் ஒருவர் உழைக்கிறார்: உழைத்துச் சேர்த்த சொத்தை அதற்காக உழைக்காதவருக்கு விட்டுச் செல்கிறார். அவரது உழைப்பும் வீணே.

Lire la suite : பொதுக்காலம் 18ம் வாரம் (04.08.2019) - ஞாயிறு வாசகங்கள்:

பொதுக்காலம் 17ம் வாரம் (28.07.2019)- ஞாயிறு வாசகங்கள்
jesus 36

முதல்வாசகம்
"தீயவரோடு நீதிமான்களையும் சேர்த்து அழித்து விடுவீரோ?
தொடக்க நூலிலிருந்து வாசகம் 18;20-32

அந்நாட்களில் ஆண்டவர் ஆபிரகாமை நோக்கி, "சோதோம் கொமோராவுக்கு எதிராகப் பெருங்கண்டனக்குரல் எழும்பியுள்ளது. அவற்றின் பாவம் மிகவும் கொடியது. என்னை வந்தடைந்த கண்டனக்குரலின்படி அவர்கள் நடந்து கொண்டார்களா இல்லையா என்று அறிந்து கொள்ள நான் இறங்கிச் சென்று பார்ப்பேன்" என்றார். அப்பொழுது அந்த மனிதர்கள் அவ்விடத்தை விட்டுச் சோதோமை நோக்கிச் சென்றார்கள். ஆபிரகாமோ ஆண்டவர் திருமுன் நின்று கொண்டிருந்தார்.

Lire la suite : பொதுக்காலம் 17ம் வாரம் (28.07.2019)- ஞாயிறு வாசகங்கள் 

பொதுக்காலம் 16ம் வாரம் (21.07.2019) ஞாயிறு வாசகங்கள்
Maria Martha

முதல்வாசகம்
உன் மனைவி சாராவுக்கு ஒரு மகன் பிறந்திருப்பான்
தொடக்க நூலிலிருந்து வாசகம் 18;1-10

அந்நாட்களில் ஆண்டவர் மம்ரே என்ற இடத்தில் தேவதாரு மரங்களருகே ஆபிரகாமுக்குத் தோன்றினார். பகலில் வெப்பம் மிகுந்த நேரத்தில் ஆபிரகாம் தம் கூடார வாயிலில் அமர்ந்திருக்கையில், கண்களை உயர்த்திப் பார்த்தார்; மூன்று மனிதர் தம் அருகில் நிற்கக் கண்டார். அவர்களைக் கண்டவுடன் அவர்களைச் சந்திக்கக் கூடார வாயிலைவிட்டு ஓடினார். அவர்கள்முன் தரைமட்டும் தாழ்ந்து வணங்கி, அவர்களை நோக்கி, "என் தலைவரே, உம் கண்களில் எனக்கு அருள் கிடைத்தாயின், நீர் உம் அடியானை விட்டுக் கடந்து போகாதிருப்பீராக!

Lire la suite : பொதுக்காலம் 16ம் வாரம் (21.07.2019) - ஞாயிறு வாசகங்கள்

AUMONERIE CATHOLIQUE TAMOULE INDIENNE 

Copyright © 2001-2017

EMAIL : webmaster@aumonerietamouleindienne.org