புதுச்சேரியின் புகழ் பெற்ற ஆலயங்களுள் ஒன்று 'கபீஸ் கோவில்' .
கப்புசின் சபைக் குருக்களால் நிர்வகிக்கப்பட்டதால் மக்கள் இதனைக் 'கபீஸ் கோவில்' என்று அழைத்தனர். உண்மையில் இது சம்மன்சுக்களின் இராக்கினி மாதா கோவிலாகும் பிரஞ்சு மொழியில் ' Eglise Notre Dame des anges' எனபது இதன் பெயர்.
கடந்த இரண்டு ஆண்டுகளாகப் புதுப்பிக்கும் பணிகள் இங்கே நடந்து வந்தன. நம் முன்னாள் ஞானகத் தந்தை மைக்கல் ஜான் மேற்கொண்ட இப்பணிகள் இனிதே முடிவடைந்தன. 04.03.2012 அன்று புதுவை -கடலூர்ப் பேராயர் மேதகு ஆனந்தராயர் அந்தோணி ஆண்டகை அவர்கள் இக்கோவிலை மந்திரித்துத் திறந்து வைத்தார். அதன் சின்னத் திரைப் படத்தை இங்கே காணலாம்.
அருட்தந்தை மைக்கல் ஜான், அப்பங்கு மக்கள், திருப்பணி நன்கொடையாளர்கள் அனைவருக்கும் நம் ஞானகத் தந்தை ஜெர்மானுஸ் முத்து, ஞானகப் பொறுப்பாளர்கள் தம் நெஞ்சார்ந்த நல் வாழ்த்துகளைத் தெரிவித்து மகிழ்கிறார்கள்.
சின்னத் திரை படம் வழகுவது : புதுச்சேரி உயர்மறைமாவட்டம்.
Adobe Flash Player not installed or older than 9.0.115!
இறுதியாக இற்றைப்படுத்தப்பட்டது (புதன்கிழமை, 07 மார்ச் 2012 10:00)
27.05.2011 வெள்ளிக்கிழமை காலை. பாதை ஓரம் பனி மூட்டம் விலகாத நேரம். புதுச்சேரி - கடலூர்ப் பேராயர் மேதகு Dr A. அந்தோணிராயர் அவர்களும் ஊட்டி ஆயர் மேதகு Dr A.அமல்ராஜ் அவர்களும் காரின் உள்ளே. கூடவே தமிழகக் குருக்கள் இருவர். அக்காருக்குச் சாரதி இங்குள்ள இந்தியத் தமிழ்க் கத்தோலிக்க ஞானகப் பொறுப்பாளர்களில் ஒருவரான திரு மொயீஸ் பெத்ரூஸ்.
26 .05 .2011 வியாழன் பிற்பகல் 2 மணி அளவில் புதுச்சேரி கடலூர்ப் பேராயர் பேரருட் பெருந்தகை Dr ஆனந்தராயர் அந்தோணி ஆண்டகை அவர்களும் ஊட்டி ஆயர் அருட்பெருந்தகை Dr அருளப்பன் அமல்ராஜ் அவர்களும் பரி நகரம் நலமாக வந்து சேர்ந்தனர்.
இறுதியாக இற்றைப்படுத்தப்பட்டது (வியாழக்கிழமை, 26 மே 2011 22:56)
நம் இந்தியத் தமிழ்க் கத்தோலிக்க ஞானகம் ஆண்டு தோறும் தவக்காலத் தியானம் நடத்தி வருவதை அனைவரும் அறிவார்கள். இந்த ஆண்டும் தவக்காலத் தியானம் அவ்ரில் மாதம் இரண்டாம் தேதி சனிக்கிழமை நடைபெற்றது. கிரிஞ்சி நகரில் உள்ள மகிழ்ச்சி மாதா ஆலயத்தில் தவக் காலத் தியானம்சிறப்பாக நடைபெறப் பெரிதும் உதவியர்கள் திருவாளர்கள் ழான் பேன்ழாமென், வீனஸ் ராம்போ. இவர்கள் இருவரும் கிரிஞ்சிப் பகுதியின் பொறுப்பாளர்கள். இந்தத் தியானத்தை நல்லபடி நடத்த இவர்கள் இருவரும் மிகக் கடுமையாக் உழைத்தனர் . அவர்களுக்கு நம் அனைவரின் பாராட்டுகள்.
இறுதியாக இற்றைப்படுத்தப்பட்டது (வெள்ளிக்கிழமை, 08 ஏப்ரல் 2011 22:47)