| Prayers |

என் அன்பான ஆண்டவரே!/
குருக்களைக் காப்பாற்றும்படியாக/ உம்மை மன்றாடுகிறோம்/
அவர்கள் உம்முடையவர்கள் ஆனதாலும்/அவர்களது வாழ்வு/ உமது பலி பீடத்தில் எரிக்கப்படுவதாலும்/ அவர்களைக் காப்பாற்றும்./ அவர்கள் உலகத்தை விட்டுப் பிரிந்தாலும்/ உலகின் நடுவே வாழ்வதாலும்/ உலக இன்பங்கள் அவர்களைச் சோதிப்பதாலும்/ அவர்களை உமது இதயத்தில் வைத்துக் காப்பாற்றும்./ அவர்கள் தனிமையாயிருக்கும் போதும்/ வேதனை படும்போதும்/ ஆன்மாக்களுக்கான அவர்களது பலி வாழ்வெல்லாம்/ வீணாகத்தோன்றும் பொழுதும்/ அவர்களைக் காப்பாற்றும்./ ஆண்டவரே!/ அவர்களுக்கு உம்மைத் தவிர/ ஒருவரும் இல்லையென்றும்/ மனித பலவீனம் கொண்ட / மனித இதயம்தான்/ அவர்களிடம் உண்டு என்றும் நினைத்து/ அவர்களைக் காப்பாற்றும்./ அவர்களது ஒவ்வொரு சிந்தனையையும்/ சொல்லையும்/ செயலையும் ஆசிர்வதித்து/ அவர்களைக் காப்பாற்றும்.
ஆமென்| < Prev |
|---|
Last Updated (Sunday, 10 January 2010 11:15)







