Multimedia
| Articles |
நெருக்கமானவர்கள்
இறைத்தந்தையை 'அப்பா” என்று உரிமையோடு அழைத்த நம் ஆண்டவா; இயேசு கிறிஸ்துவே இறையனுபவத்திற்குச் சிறந்த எடுத்துக் காட்டாக விளங்குகிறாh;. தந்தை இறைவனோடு அவர் கொண்டிருந்த நெருக்கம்தான், இறையரசைப் பரப்பும் பணியி;ல் அவருக்கு உற்சாகத்தைக் கொடுத்தது.
திருச்சபையின் ஆரம்பக் காலத்தில் கிறிஸ்துவர்களைத் துன்புறுத்திவந்த சவுல், உயிரோடெழுந்த இயேசுவைத் தமஸ்குவுக்குப் போகிற வழியில் முகமுகமாய்ச் சந்;தித்தார். அன்று அங்கு அவா; பெற்ற இறை அனுபவம்தான் 'வாழ்வது நானல்ல, இயேசுவே என்னில் வாழ்கிறார்.” என்று கூறவும் அவருக்காகவே தன்னை முழுதும் அh;ப்பணித்து அவருக்காகவே மரிக்கவும் ஆயத்தமாக்கி இறைவனுக்கு மிகவும் நெருக்கமானவராக்கியது. இங்ஙனம் இ;றை அனுபவத்தை வாழ்ந்த பவுல் அடிகளாரின் நுாற்றாண்டு விழாவைச் சிறப்பாகக் கொண்டாடி நிறைவு செய்திருக்கும் இந்த வேளையில், குருக்கள் ஆண்டைக் கொண்டாடும்படி திருத்தந்தை அழைப்பு விடுத்துள்ளார்.
'நிறைவான குரு', 'பங்கு மக்களின் முன்மாதிரி”, 'உண்மையான கடவுளின் மனிதர்” என்று பங்கு மக்களால் போற்றப்பட்டவா;; பிரான்ஸ் நாட்டின் ஆர்சு என்னும் பங்கின் ஆன்ம குருவான ஜான் மரிய வியான்னி. பங்கு குருக்களுக்குப் பாதுகாவலராகிய இவர் இறப்பின் 150 -ஆம் ஆண்;டினை நினைவு கூறும் வகையில் குருக்கள் ஆண்டு கொண்டாடப்படுகிறது.
தனது புனித வாழ்வின் வழியாக இறைவனுக்கு மிகவும் நெருக்கமானவராக வாழ்ந்த இவருக்குக் கடவுள் பல அருள் வரங்களைப் பொழிந்தருளினார். அவற்றுள் குறிப்பிடத்தக்கது மனிதா;களின் ஆன்ம நிலையைக் கண்டறிந்து இறையுறவில் வளர ஒவ்வொருவருக்கும்; சரியான ஆலோசனைகளை வழங்குவது ஆகும். விளைவு ஒப்புரவு அருட்சாதன அறையையே தன் வாழ்விடமாக மாற்றிக்கொண்டவர் இவர்;. மக்களை இறைவனுக்கு நெருக்கமானவா;களாக மாற்றியதால் இவா; 'ஒப்புரவு திருவருட் சாதனத்தின் மறைச்சாட்சி” என்றே அழைக்கப்படுகிறார்.
'விண்ணுலகத்தின் மகிழ்ச்சியும் அருளும் குருக்கள் வழியாகவே இவ்வுலகத்தில் நமக்கு கிடைக்கின்றன. குருத்துவம் என்னும் அருட்சாதனம் இல்லையெனில் நமது ஆண்டவரை அடைந்திருக்க முடியாது” என ஆணித்தரமாகக் கூறுகிறார் புனித வியான்னி அவர்கள்.
குருத்துவப் பணியை யாரும் தாமே தேர்ந்து கொள்வதில்லை.
'நீங்கள் என்னைத் தேர்ந்து கொள்ளவில்லை. நான்தான் உங்களைத் தேர்ந்து கொண்டேன். நீங்கள் உலகில்சென்று பலன் தரும்படியாகவும் அந்தப் பலன் நிலைத்திருக்கும் படியாகவும் உங்களை ஏற்படுத்தினேன்” என்று இயேசு கூறுகின்றாh;. ஆகவே ஆரோனுக்கு வந்தது போன்று கடவுளிடமிருந்தே அழைப்பு வரவேண்டும். இந்த அழைத்தல் என்பது கிறிஸ்துவினுடைய கொடையாக இருக்கின்றது. இங்ஙனம் நம்மிடையேயிருந்து இறைவன் தோ;ந்தெடுத்த குருக்கள், அவருடைய மாசற்ற இதயத்துக்கு மிகவும் நெருக்கமானவர்கள்.
குருக்கள் எனப்படுகின்ற அருட்பணியாளர்கள் வெறும் சமூகத் தொண்டா;களோ மனிதநேயச் செயல்களில் ஈடுபடுபவா;களோ அல்லா;. கிறிஸ்துவின் முப்பெரும் பணிகளான இறைவாக்குப் பணி, புனிதப்படுத்தும் பணி, மேய்ப்புப் பணி ஆகியவற்றைக் கிறிஸ்துவின் மனநிலையோடு நிறைவேற்றும் ஊழியா;கள் ஆவா;. இவ்வு+ழியத்தைத் திறம்பட நிறைவேற்ற இன்றியமையாத பண்பாக அமைவது இறைவனைத் தன் உள்ளத்தில் தாங்கி அவரது அன்பைச் சிறப்பான வகையிலே அனுபவித்து வாழுதல் ஆகும். அப்படி வாழ்வதால் இறைவனுக்கு நெருக்கமானவா;களாக ஆகிறார்கள்.
இவா;கள் இறைவனுக்கும் நமக்கும்; இடையே இணைப்பாளராய், பாலமாய் இருந்து, நமக்காகப் பரிந்து பேசி திருப்பலியையும், அருட்சாதனங்களையும் நிறைவேற்றுகிறார்கள். நற்செய்தியை எடுத்துரைத்து, அருள் வாழ்வில் திடப்படுத்தி, மீட்புப் பாதையில் வழிநடத்தித் துர்ய வாழ்விற்கு நம்மை அழைத்துச் செல்வதால் நமக்கும் நெருக்கமானவர்களே.
மனிதனின் பிறப்பு- ஞானஸ்நானம் முதல் இறப்புவரை - இறந்தபின் கல்லறை குழியில் வைக்கும் வரை.கூட இருப்பவா; குருவே. சமூக வாழ்வு, கல்வி, நலவாழ்வு, ஆன்மீகம் என அனைத்துத் துறைகளிலும் மக்கள் குருக்களிடம் வழிகாட்டுதல் கேட்டு வருகிறார்கள். குடும்பத்தில் ஒரு பிள்ளை குருவாக இருந்தால் அதை மிகப் பொpய பேறாகவும் பெருமையாகவும் நம் முன்னோர்கள் நினைத்தார்கள்.
ஒவ்வொரு குருவும் ஒரு கிறிஸ்து. குரு மட்டுமே ஒப்புரவு திருவருட்சாதனத்தில் பாவங்களைக் கேட்டுப் பொறுத்தல் அருள இயலும். இத்தகைய திருவருட்சாதனங்களில் கிறிஸ்துவாகவே செயலாற்றும் வலிமை அவருக்கே உண்டு. குரு மட்டுமே, நற்கருணையில் இறைவனை எழுந்தருளச் செய்ய முடியும். பீடத்தின் மேல் கிறிஸ்துவை எழுந்;தருளச் செய்வது குருவின் உதடுகளே! கிறிஸ்துவின் இறப்பு என்னும் ஈடற்ற தியாகத்தைத் திருப்பலியில் புதுப்பிப்பவை குரு உச்சரிக்கும் வசீகர வார்த்தைகள்தாமே! அப்ப ரச குணங்களுக்குள் எழுந்தருளி வரும் இறைமகன் கிறிஸ்துவை ஏந்துபவை குருவின் அபிடேகம் செய்யப்பட்ட திருக்கரங்கள் அல்லவா!
ஒருவருடன் பரஸ்பர உறவுடன் இருக்க வேண்டுமானால் அவர்களைப் பற்றிய சிந்தனை நம் மனத்தில் இருக்கவேண்டும். குருவானவா; இறைவனைப் பற்றிய சிந்தனையில் இருப்பதால் இறைவனுக்கு மிகவும் நெருக்கமானவராக இருக்கிறார் இத்தகைய நெருக்கம் நமக்கும் தேவைதான். ஏனெனில் கிறிஸ்துவுடன் உள்ள நெருக்கத்தை வளர்த்துக்கொள்ளவே நாம் அழைக்கப்பட்டிருக்கிறோம். எனினும் இது நம்மைவிடக் குருக்களுக்கே மிகவும் பொருந்தும். மேலும் ஏனைய நெருக்கங்களைக் குரு தியாகம் செய்ய வேண்டீ உள்ளது. தன் குருத்துவத்துக்கு ஒவ்வாத ஏனைய நெருக்கங்களைக் குரு தியாகம் செய்யும் போதுதான் கிறிஸ்துவோடு அவருக்கு உள்ள நெருக்கம் வளரும். குருத்துவத்துக்காக அவர் தர வேண்டிய முதல் விலை இதுதான்!
மீட்பரோடு உள்ள நெருக்கம் வளரவேண்டுமானால், நாம் கிறிஸ்துவை நம் இதயத்தில் நிலைத்திருக்கச் செய்ய வேண்டும். நம் இதயங்கள் அன்பு செலுத்தவே உருவாக்கப்பட்டவை. அப்படியானால் நம் இதயங்கள் செல்லக் கூடிய வழிகள் இரண்டே : இறைப்படைப்பின் மீது பற்றுக் கொள்வது அல்லது இறைவன் மீது பற்று வைப்பது. இறைப்படைப்பு மீதுள்ள பற்றைத் தியாகம் செய்தால்தான் நம் இதயங்கள் இறைவனை நோக்கிச் செல்ல முடியும். திருச்சிலுவை யோவான் கூறுகிறார்; : 'இறைவனுக்காகப் படைக்கப்பட்டதே மனித இதயம். இறைப்படைப்பின் மீதுள்ள பற்றை உதறித் தள்ளும் போதுதான் இறைவனை நம் இதயம் முழுமையாக நேசிக்க இயலும்”. ஆகவே இறைப் பற்றே நம் இதயத்தை ஆளவேண்டும்;. இந்த இறைப்பற்றுத்தான் குருவின் உள்ளத்தில் கொழுந்து விட்டு எரியும்.
திருநிலைப் படுத்தப்பட்ட குரு, கிறிஸ்துவோடு எல்லா விதங்களிலும் இணைக்கப் பட்டிருக்கிறார். தன் மனித பலவீனத்தை அறிந்துகொண்டு, ஒப்புக்கொண்டு இறை வலிமையை நாடும் போதுதான் குரு இறைவனுக்கு முழுமையான பணியாளராக ஆகிறார். இப்படிப் பணியாளராக ஆகும் குரு செய்யும் தியாகங்கள் மகத்தானவை! இல்லற இன்பத்தைத் துறப்பது என்ன அவ்வளவு எளிதா, என்ன? வாழ்நாள் முழுவதும் பிரம்மச்சரியத்தைக் கடைப்பிடிப்பது என்பது எவ்வளவு பெரிய சாதனை. இப்படி எத்தனை எத்தனைச் சோதனைகளையும் வேதனைகளையும் இடையு+றுகளையும் குரு சமாளிக்க வேண்டி உள்ளது? குருவால் மட்டும் எப்படி இது சாத்தியமாகிறது? ஆம், கிறிஸ்துவோடு அவருக்கு உள்ள நெருக்கம்தான் குருவின் இந்தச் சாதனைக்குத் துணையாகிறது. இதன் காரணமாகத்தான், 'குருவைப் பெருமை படுத்துகிறவன் கிறிஸ்துவையே பெருமை படுத்துகிறான். குருவை அவசங்கை செய்பவன் கிறிஸ்துவையே அவமதிக்கிறான்” என்று புனித ஜான் கிறிசோஸ்தம் கூறுகிறார்.
எனவே, ஒரு குருவைச் சந்திக்கும்பொழுது அவாpல் இயேசுவை, இறை பிரசன்னத்தை காணத் தவற வேண்டாம். இப்படிக் கிறிஸ்துவாகவே மாறி வாழும் குருவுக்காக ஓர் ஆண்டைப் பாப்பரசர் ஒதுக்கி உள்ளதும் பாராட்டத்தக்கதே! குருக்களுக்கான இந்தச் சிறப்பு ஆண்டில் அவர்களுக்காகச் சிறப்பாகச் செபிப்போம். அவா;கள் தியாகத்தை, சேவைகளைப் பாராட்டுவோம்! வாயார அவர்களுக்குப் புகழ் மாலை சு+ட்டுவோம்.
- லெயா
| < Prev | Next > |
|---|
Last Updated (Sunday, 10 January 2010 01:16)









