Get Adobe Flash player

Articles

மறை உரை : பாவிகளை வரவேற்கும் இயேசு

அருள்பணி மரிய அந்தோணிராஜ்

பொதுக்காலம் இருபத்து நான்காம் ஞாயிறு -  I விடுதலைப் பயணம் 32: 7-11 / II. 1 திமொத்தேயு 1: 12-17 / III - லூக்கா 15: 1-32 - 
 


நிகழ்வு - இளைஞன் ஒருவன் இருந்தான். அவன் தான் பணிசெய்து வந்த இடத்தில் தன்னோடு பணிசெய்து வந்த ஓர் இளம்பெண்ணை உயிருக்கு உயிராகக் காதலித்தான்; அவளையே திருமணம் செய்துகொள்வதென முடிவுசெய்தான். இது குறித்து அவன் தன்னுடைய தந்தையிடம் பேசியபோது அவர், “சொந்த பந்தத்தில் இருக்கின்ற ஒரு பெண்ணைப் பார், கட்டிவைக்கிறேன்... அதை விடுத்து யாரோ ஒரு பெண்ணை திருமணம் செய்துகொள்ளப் போகிறாய் என்றால், என்னால் அவளை வீட்டில் ஏற்றுக்கொள்ள முடியாது” என்று மறுத்துவிட்டார்.

Lire la suite : மறை உரை : பாவிகளை வரவேற்கும் இயேசு

8 செப்டம்பர் 2019 ஆண்டின் பொதுக்காலம் 23ஆம் ஞாயிறு
 
I. சாலமோனின் ஞானம் 9:13-18  II. பிலமோன் 9-10,12-17  III. லூக்கா 14:25-33
 
மீட்பு அளிக்கும் ஞானம்!
 அருள்பணி இயேசு கருணாநிதி திருச்சி

காலத்திற்கும் இடத்திற்கும் உட்பட்ட நாம் எப்போதும் நாம் நம்முடைய காலத்தையும் இடத்தையும் நீடித்துக்கொள்ளவே விரும்புகிறோம். நிறைய ஆண்டுகள் வாழ விரும்புகிறோம், நிறைய இட வசதியோடு வீடு கட்டிக்கொள்ள விரும்புகிறோம், நிறைய இட வசதி கொண்ட வாகனம் வாங்க விரும்புகிறோம், நீடித்த பேட்டரி, நீடித்த கறுப்பு நிற முடி, நீடித்த சிவப்பழகு, நீடித்த டிவி, நீடித்த முதலீடுகள், நீடித்த வட்டி விகிதம் என எல்லாவற்றிலும் நீட்சியை விரும்புகிறோம். இவை எல்லாமே நம்முடைய நீடித்த மகிழ்விற்கான தேடலின் வெளிப்பாடுகள். நமக்குக் கிடைக்கும் சின்னஞ்சிறு மகிழ்ச்சி தருணங்கள், அனுபவங்கள் நீடிக்காதா என ஏங்குகிறோம்.

Lire la suite : மீட்பு அளிக்கும் ஞானம்!  -08.09.2019  ஞாயிறு வாசகங்களின் விளக்கங்கள்

01 செப்டம்பர் 2019 ஆண்டின் பொதுக்காலம் 22ஆம் ஞாயிறு வாசகங்கள்.
விளக்கம் : அருள்பணி இயேசு கருணாநிதி திருச்சி
 
I. சீராக்கின் ஞானம் 3:17-18,20,28-29  II. எபிரேயர் 12:18-19,22-24  III. லூக்கா 14:1,7-14
 
பணிவும் பரிவும்!
 
தாழ்ச்சி என்ற மதிப்பீட்டுக்குப் பல நேரங்களில் எடுத்துக்காட்டுக்களை நாம் நமக்கு வெளியில் தேடுகிறோம். ஒபாமா தன்னுடைய உதவியாளருக்கு கை கொடுத்தார், போப் பிரான்சிஸ் தன்னுடைய காவலாளருக்கு நாற்காலி கொடுத்தார், அவர் தன்னுடைய காலணிகளுக்குத் தாமே பாலிஷ் போட்டார், இவர் தன்னுடைய வீரர் ஒருவருக்குத் தானே உதவி செய்தார். இப்படி நாம் நினைக்கும் பெரியவர்கள் தங்கள் வாழ்வில் தாழ்ச்சியாக இருந்த தருணங்களையே எண்ணிப் பார்க்கிறோம். மேற்காணும் நிகழ்வுகளில் தாழ்ச்சி இருப்பது உண்மைதான். ஆனால், தாழ்ச்சியோடு கலந்து பரிவு நமக்கு அருகிலேயே இருக்கிறது.

Lire la suite : 01 செப்டம்பர் 2019 ஆண்டின் பொதுக்காலம் 22ஆம் ஞாயிறு-வாசகங்கள்

கிறிஸ்தவம் இடையில் வந்த வந்தேறிகளின் மார்க்கமா?
-ஜான்சன் நீதிமாணிக்கம் -
 

கிறிஸ்தவம் வந்தேறிகளின் மார்க்கம். இந்து மதமே தொன்மையான மதம் என்று சரித்திரம் தெரியாத சிலர், அல்லது திட்டமிட்டு உண்மையை திரித்து, மறைக்க விரும்புகிறவர்கள் வாதிடுகின்றனர். மாற்றான் தோட்டத்து மல்லிகையும் மணக்கும் என்று நம் பெரியவர்கள் கூறியிருப்பதுபோல, இக்கட்டுரையைப் படிக்கிற யாவரும் சரித்திர உண்மைகளை திறந்த மனதோடு சீர்த்தூக்கிப் பார்க்க அன்புடன் கேட்டுக்கொள்கிறேன்.

Lire la suite : கிறிஸ்தவம் இடையில் வந்த வந்தேறிகளின் மார்க்கமா? 

மறை உரை : உண்மையான அமைதியைத் தருபவர் இயேசு
அருள்பணி மரிய அந்தோணிராஜ் (அருள்வாக்கு இணையதளம்)


பொதுக்காலம் இருபதாம் ஞாயிறு - I எரேமியா 38: 4-6, 8-10; II எபிரேயர் 12: 1-4; III லூக்கா 12: 49-53

 நிகழ்வு -  பப்புவா நியூ கினிவா (Papua New Guinea) என்ற தீவில் உள்ள பழங்குடி மக்கள் மத்தியில் பல ஆண்டுகாலம் மறைபோதகப் பணியைச் செய்தவர் டான் ரிச்சர்ட்சன் (Don Richardson). இவர் ‘அமைதியின் குழந்தை’ (The Peace Child) என்றொரு புத்தகம் எழுதியுள்ளார். அந்தப் புத்தகத்தில் இடம்பெறும் நிகழ்வு இது.  பப்புவா நியூ கினியாவில் இரண்டு இனக்குழுக்கள் உண்டு. அந்த இரண்டு இனக்குழுக்களுமே காலங்காலமாக ஒருவரோடு இருவர் போரிட்டுக்கொண்டு செத்து மடிந்துகொண்டிருந்தார்கள்.

Lire la suite : மறை உரை : உண்மையான அமைதியைத் தருபவர் இயேசு -18.08.2019 

மறை உரை : மரியன்னையின் விண்ணேற்பு (ஆகஸ்ட் 15)
- அருள்பணி மரிய அந்தோணிராஜ் (அருள்வாக்கு இணையதளம் )


நிகழ்வு -  மரியன்னையின் விண்ணேற்பைக் குறித்து சொல்லப்படும் தொன்மம். மரியா தன்னுடைய கடைசி காலத்தை சியோன் மலையருகிலே
இருந்த ஓர் இல்லத்தில் செலவழித்தார். அவருக்கு 60 வயது நடந்துகொண்டிருந்தபோது ஒருநாள் வானதூதர் அவருக்குக் காட்சி கொடுத்து, அவர் எப்படி இறப்பார், இறந்த பிறகு என்ன ஆவார் என்பது குறித்து சொல்லிவிட்டுச் சென்றார்.

Lire la suite : மறை உரை : மரியன்னையின் விண்ணேற்பு (ஆகஸ்ட் 15) 

இன்றைய (15 ஆகஸ்ட் 2019) திருநாள்

 மரியாளின் விண்ணேற்பு
அருள்பணி இயேசு கருணாநிதி திருச்சி
 
'தாம் முன்குறித்து வைத்தோரை அவர் அழைத்திருக்கிறார்.
தாம் அழைத்தோரைத் தமக்கு ஏற்புடையவராக்கி இருக்கிறார்.
தமக்கு ஏற்புடையரானோரய்த் தம் மாட்சியில் பங்குபெறச் செய்தார்.' (உரோ 8:30)
 
குருக்களின் மாலைச் செபத்தில் மேற்காணும் இறைவார்த்தைகளே வாசகமாக கொடுக்கப்பட்டுள்ளன.

Lire la suite : இன்றைய (15 ஆகஸ்ட் 2019) திருநாள்   மரியாளின் விண்ணேற்பு

11 ஆகஸ்ட் 2019 ஆண்டின் பொதுக்காலம் 19ஆம் ஞாயிறு  வாசகங்களின் விளக்கங்கள்
அளிப்பவர் : அருள்பணி இயேசு கருணாநிதி திருச்சி
I. சாலமோனின் ஞானம் 18:6-9  II. எபிரேயர் 11:1-2, 8-12  III. லூக்கா 12:32-48
 
நம்பிக்கையின் பொருள்
 
ஒவ்வொரு நாள் காலையில் அவன் அவளுக்கு பல் துலக்கிவிடுவான். அவளைக் குளிக்க வைப்பான். அவளுக்கு உணவு ஊட்டுவான். ஒவ்வொரு நாள் மாலையில் அவன் அவள் அருகில் அமர்வான். அவளின் கரங்களைத் தன் கரங்களுக்குள் பொத்திக்கொண்டு அவளை வருடிக்கொண்டே அவளுக்கு நிறைய கதைகள் சொல்வான். தன் வலியையும் பொருட்படுத்தாமல் அவள் புன்னகை புரிவாள். அவளுக்கு விருப்பமான பாடல்களை அவன் பாடிக் காட்டுவான்.

Lire la suite : நம்பிக்கையின் பொருள் - ஞாயிறு வாசகங்களின் விளக்கங்கள்

4 ஆகஸ்ட் 2019: ஆண்டின் பொதுக்காலம் 18ஆம் ஞாயிறு
ஞாயிறு வாசகங்களின் விளக்கங்கள்
தருபவர் : அருள்பணி இயேசு கருணாநிதி திருச்சி
I. சபை உரையாளர்  1:2, 2:21-23  II. கொலோசையர் 3:1-5, 9-11  III. லூக்கா 12:13-21
செல்லும் செல்வம்!
'செல்வம்' என்பது எப்போது நம் கைகளை விட்டுச் 'செல்வோம்' என்று நிற்பதால்தான், செல்வத்திற்கு 'செல்வம்' என்று பெயர் வந்தது என 'அர்த்தமுள்ள இந்துமதம்' நூலில் பதிவு செய்கிறார் கண்ணதாசன்.
செல்வம் என்று வரும்போதெல்லாம் விவிலியம் இரண்டுவகை கருத்துக்களைக் கொண்டிருக்கிறது: ஒரு பக்கம், செல்வம் அறவே கூடாது என்றும், 'பண ஆசையை அனைத்து தீமைக்கும் ஆணிவேர்' என்றும் கற்பிக்கின்றது. மறு பக்கம், பயன்படுத்தப்படும் உருவகங்கள் எல்லாம் 'புதையல்,' 'முத்து' என்று செல்வம் பற்றியதாகவே இருக்கிறது.  ஒரு பக்கம், செல்வம் என்பது இறைவனின் ஆசீர் என்று சொல்லப்படுகிறது. மறு பக்கம், ஏழையரின் அருகில்தான் இறைவன் இருக்கிறார் என்று சொல்லப்படுகிறது. எதை எடுத்துக் கொள்வது? எதை விடுவது? செல்வத்தைப் பிடித்துக் கொள்வதா? விட்டுவிடுவதா? செல்வத்தை நாடுவதா? அல்லது அதை விட்டு ஓடுவதா?  செல்வம் நமக்குத் தருகின்ற வாழ்வை நாடுவதா? அல்லது வாழ்வு தருகின்ற செல்வத்தை நாடுவதா? செல்வம் தரும் வாழ்வா? வாழ்வு தரும் செல்வமா?

Lire la suite : செல்லும் செல்வம்!-04.08.2019 ஞாயிறு வாசகங்களின் விளக்கங்கள்

இன்றைய புனிதர் † (ஜூலை 31) புனிதர் இஞ்ஞாசியார்
St Ignatius Loyola

கத்தோலிக்க குரு/ இயேசு சபை நிறுவனர் :

பிறப்பு : அக்டோபர் 23, 1491

அஸ்பெய்டா, லயோலா, கிபுஸ்கோவா, பாஸ்க் நாடு, கேஸ்டில் அரசு (தற்போதைய ஸ்பெயின்)

 இறப்பு : ஜூலை 31, 1556 (வயது 64)

ரோம் நகரம், திருத்தந்தையர் மாநிலங்கள்

முக்திபேறு பட்டம் : ஜூலை 27, 1609

திருத்தந்தை ஐந்தாம் பவுல்

புனிதர் பட்டம் : மார்ச் 12, 1622

திருத்தந்தை பதினைந்தாம் கிரகோரி

நினைவுத் திருவிழா : ஜூலை 31

Lire la suite : இன்றைய புனிதர் †  (ஜூலை 31)  ✠ புனிதர் இஞ்ஞாசியார் ✠

AUMONERIE CATHOLIQUE TAMOULE INDIENNE 

Copyright © 2001-2017

EMAIL : webmaster@aumonerietamouleindienne.org